அதிராம்பட்டினம் நகர் மன்ற தலைவராக சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுகவின் MMS தாஹிரா அம்மாள் கறிம் தேர்வாகினார்.
அதன்பின் நடந்த துணைத்தலைவர் தேர்தலில்,இராம குணசேகரன் துணை தலைவராக தேர்வாகி உள்ளார்.
இந்த தேர்தலில் முஸ்லீம் லீக் தணித்தே களம் கண்டது. இதில் 7வது வார்டு உறுப்பினராக முபீன் மனைவி தேர்வானார்.
இந்த நிலையில் அதிரை நகரில் புதிதாக பொறுப்பு ஏற்று இருக்கிற தலைவர், துணைத் தலவரை முஸ்லீம் லீக்கின் நகர நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
அப்போது நகர வளர்ச்சிக்கு முக்கியத்துவம், சுகாதாரத்தில் அக்கறை போன்ற முக்கிய பிரச்சனைகளை விரைவில் முன்னெடுக்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது நகர முஸ்லீம் லீக் தலைவர் KK ஹாஜா நிஜாமுதீன், நகர செயலாளர் வக்கீல் முனாஃப், 7வது வார்டு கவுன்சிலர் கனவர் முபீன்,ஷேக் அப்துல்லா,அபூபக்கர், ஜமால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாலவை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Your reaction