அதிரை மார்க்கமாக சென்னைக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரிடம் மக்கள் கோரிக்கை!

638 0


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் 25/02/2022) ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் திரு.மனிஷ் அகர்வால் அவர்களுக்கு அதிரை ரயில் நிலையத்தில் பெரும் வரவேற்பு வழங்கப்பட்டது.

சம்சுல் இஸ்லாம் சங்கம், ஐமஆத்துல் உலமா, அனைத்து முஹல்லா கூட்டமைப்பு, அதிரை திமுக, அதிரை SDPI, அதிரை தமுமுக, Adirampattinam Rural Development Association, Adirampattinam Passenger Welfare Association, United Foundation, Lions Club of Adirampattinam, Rotary Club of Adirampattinam ஆகிய தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பாக கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டது.

அதிராம்பட்டினம் வழியாக சென்னைக்கு நேரடி எக்ஸ்பிரஸ் ரயில் உட்பட மதுரை, இராமேஸ்வரம், திருநெல்வேலி, எர்ணாக்குளம் போன்ற நகரங்களுக்கு அதிராம்பட்டினம் வழியாக ரயில்களை இயக்க வேண்டும் என்றும் அதிரை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

அனைவரிடமும் கோரிக்கைகளை பெற்றுக்கொண்ட திருச்சி கோட்ட மேலாளர் ரயில் நிலையத்தைப் பார்வையிட்டார். அதிராம்பட்டினம் ரயில் சங்கம் சார்பாக திரு. அப்துல் ராஜக் அவர்கள் கோட்ட மேளாளர் அவர்களுடன் சென்று அனைத்து தேவைகளையும் எடுத்துரைத்தார். தேவைகளை ஒவ்வொன்றாக கேட்டரிந்த கோட்ட மேலாளர் அனைத்து கோரிக்கைகளையும் பரீசிலித்து அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுத்து தேவைகளை பூர்த்தி செய்வதாக உறுதியளித்தார்.

மேலும் பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் நலசங்கத்தின் தலைவர் திரு.ஜெயராமன் அவர்களும், செயலாளர் திரு.விவேகானந்தன் அவர்களும் அதிரை ரயில் நிலையத்திற்கு வருகை தந்து நமது திருவாரூர் காரைக்குடி வழித்தடத்தில் மேற்கொண்டுவரும் பல்வேறு முயற்சிகள் பற்றியும், கேட்கீப்பர் பணியமர்த்தல் முயற்சிகளைப் பற்றியும், விரைவு ரயில் தேவைகளைப் பற்றியும் விளக்கமளித்தார்கள்.

நமது ரயில் பாதை வழியாக ரயில்களை இயக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் திருச்சி கோட்ட மேலாளர், பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கத்தினர், திருவாரூர் ரயில் பயணிகள் சங்கத்தினர், அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் சங்கத்தினர், அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து தன்னார்வ அமைப்புகள் , அனைவருக்கும் அதிராம்பட்டினம் ரயில் ஆர்வலர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.


Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: