ஆட்சிக்கு வந்து எட்டே மாதத்தில் 28% வாக்குகளை இழந்த அதிரை திமுக!

589 0


கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு பட்டுக்கோட்டை தொகுதிக்குட்பட்ட அதிரையில் 68% வாக்குகள் கிடைத்ததாக திமுகவினர் சமூக வலைதளங்களில் சிலாகித்து எழுதினர். மேலும் அதிரை திமுகவின் கோட்டை என்றும் முழங்கின. அதேசமயம் சமீபத்தில் நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் 40% சதவீதம் வாக்குகளை மட்டுமே திமுக பெற்றுள்ளது. நகர்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 70%த்திற்கு மேல் பெற்றிருந்தாலும் மாநிலத்தில் ஆளும் கட்சியின் ஒட்டு சதவீதம் சாதாரண நகராட்சி தேர்தலில் சரிந்திருப்பது அனைவரது புருவங்களையும் உயர்த்த செய்துள்ளது. இனியேனும் மக்களுக்கு சேவை செய்து  உள்ளூர் திமுக-வினர் விழித்துக்கொள்ள தவறினால் கழுதை தேய்ந்து காட்டெரும்பான கதை தான் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: