அதிரையில் நேற்றைய தினத்துடன் நகராட்சி தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு முடிவடைந்தது. 6வது வார்டில் அகமது ஹாஜாவின் மனைவியும், 7வது வார்டில் அப்துர் ரஹ்மானின் மனைவியும், 11வது வார்டில் ஹாஜாவின் மனைவியும் ஆகியோர் தண்ணீர் குழாய் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இந்த மூன்று வார்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் கணவர்கள் தங்களது ஆதரவாளர் பட்டாளத்துடன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.

Your reaction