அதிரை தேர்தல் களம் ! அரசியல் ஆளுமைக்கு அங்கீகாரம் தாருங்கள் என சமூக ஆர்வலர் அஃப்ரித் வேண்டுகோள் !!

569 0


45 ஆண்டுகால அரசியல் பாடம், அதிகாரிகள் மட்டத்தில் நல்ல அனுகு முறை, அன்றைய காங்கிரஸ் கட்சியானலும், அடுத்து வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியானாலும்.
செல்வாக்கும் சொல் வாக்கும் ஒருங்கே அமைந்த மமீசெ வம்சத்தினரின் ஆளுமை மட்டும் இன்றளவும் மழுங்காமலே இருந்து வருகிறது.

கடந்த பத்தாண்டு கால அரசியலில் புண்பட்ட நெஞ்சங்கள் இல்லாமல் இல்லை என்ற அளவிற்கு நொந்து போயுள்ள மனங்களை ஆற்ற மீண்டும் ஒரு முறை வாய்பளிக்க மக்கள் தயாராகிவிட்டதாக பொது நலனில் அக்கரை கொண்ட அஃரித் தெரிவிக்கிறார்.

45 ஆண்டுகாலம் அதிரையை தமது ஆளுமைக்குள் கட்டிக்காத்த MMS குடும்பத்தினர், காங்கிரசில் இருந்து பிரிந்து தமாக என்ற GK வாசனின் கட்சியான தாமகவின் கட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்தனர்.

தமாக பாஜகவுடன் கூட்டு சேர்ந்த தவறான அணுகுமுறையை கண்டு சகிக்காத MMS குடும்பத்தினர் அக்கட்சியின் பொறுப்புகளை தூக்கி எரிந்துவிட்டு சமூக நலன் மட்டுமே பிரதானம் என அக்கட்சியில் இருந்து வெளியேறினர்.

காலத்தின் தேவையும் சமூகத்தின் நலனும் மிக முக்கியம் எனக் கருதி திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்.

இந்த நிலையில் 2022க்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகி, இருந்த நிலையில் திமுக கழகம். சார்பில் —வார்டில் முன்னாள் நகர சேர்மன் MMSA தாஹிரா அம்மாளும், திமுகவின் —மான அப்துல் கறிம் 10ஆம் வார்டில் போட்டியிடுகின்றனர்.

செல்வாக்கும் சொல் வாக்கும் ஒருங்கே அமைந்த மமீசெ குடும்பம் மீண்டும் அரசியல் களத்தில் இறங்கி உள்ளது குறித்து பெரும்பாலான அதிரையர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளதாக அஃப்ரித் தெரிவிக்கிறார்.

அதிரையை தமது ஆளுமைக்குள் MMS சுல்தான் அப்துல் காதர், MMS சேக்தாவூது வரிசையில் உள்ள அப்துல் வகாப் வரை தொடர்ந்த அரிய பணிகளை பட்டியலிட்ட அஃரித் .

ஊழல் என்ற வார்த்தையை கூட உச்சரிக்கை வைக்கவில்லை என்றும்,
சமூக நல்லிணக்கத்திற்கு ஒருபோதும் சஞ்சலம் ஏற்படுத்தியதில்லை என்கிறார்.

நான்கு தலைமுறை கடந்தும் மங்காத பலம். குற்ற பின்னனி இல்லா அரசியல் வாழ்க்கை, ஆளுங்கட்சியாக அல்லாமல் இருந்த போதே பல சாதனைகளை செய்து காட்டிய MMSA தாஹிரா அம்மாள் தற்போது ஆளுங்கட்சியின் அங்கீகாரமிக்க வேட்பாளராக களமிறங்கி உள்ளார் என்றார்.

10 வது வார்டில் உதய சூரியன் சின்னத்தில் MMSA தாஹிரா அம்மாள் போட்டியிடுகிறார்கள் என்றும், கிட்டத்தட்ட வெற்றி உறுதியாகி விட்டதாக நம்பிக்கை தெரிவிக்கிறார் அஃப்ரித்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: