அதிரையில் உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நகராட்சியை கைப்பற்றுவதற்கு, திமுக கூட்டணி, OSK-மஜக-SDPI கூட்டணி, அதிமுக கூட்டணி தீவிர களப்பணி ஆற்றிவருகின்றனர். மேலும் பல வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்களும் கடும் போட்டி ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக கூட்டணிக்கு வாக்கு கேட்டு திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் இன்று அதிரையில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அப்போது செக்கடிமேடு அருகே பேசிய நகர திமுக செயலாளர் இராம. குணசேகரன், நகராட்சி தேர்தலில் திமுக வெற்றிபெற்றால், நகரமன்ற தலைவராக இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒருவரே நிச்சயம் தேர்ந்தெடுக்கப்படுவார் என உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு நகர மன்ற தலைவராகும் எண்ணம் இல்லை என்றும், தான் அதற்கு என்றைக்கும் ஆசைப்பட்டதில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Your reaction