அதிரை நகர மனிதநேய ஜனநாயக கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த அக்கட்சியின் பொது செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி, அக்கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 5வது வார்டு வேட்பாளர் A.பைசல் அகமது, 17வது வார்டு வேட்பாளர் பா.ஹாஜா மர்ஜிக், 24வது வார்டு வேட்பாளர் H.ஸ்மார்ட் சாகுல் ஹமீது ஆகியோர் தமீமுன் அன்சாரியிடம் வாழ்த்து பெற்றனர்.
பின்னர் அதிரை எக்ஸ்பிரசுக்கு பேட்டியளித்த தமீமுன் அன்சாரி, மஜக வேட்பாளர்கள் வெற்றிபெற்று வந்ததும் ஒட்டுமொத்த அதிரைக்கும் சேவை செய்வார்கள் என்றார். இதனிடையே கடலோர பகுதிகளில் ஏற்கனவே அமைக்கப்பட்ட காஸ்டிக் சோடா தொழிற்சாலைகளால் மக்களின் ஆரோக்கியமும் சுற்றுசூழலும் பாதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டிய அவர், அதிரையில் காஸ்டிக் சோடா தொழிற்சாலையை அமைக்கவிட மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
Appreciate this post. Will try it out.