அதிரை நகராட்சி தேர்தல் களம் குடும்பம், கோத்திரத்தின் பெருமை பேசும் களமாக மாறி இருக்கிறது. குடும்ப வாக்குகளை கணக்கிட்டு களத்தில் குதித்திற்கும் சில வேட்பாளர்கள், தனது உறவுக்காரர்களிடம் பிற குடும்பத்தினரை தரக்குறைவாக பேசி நம்ம குடும்பத்துக்காரன் ஜெயிக்க வேண்டும் என வெறுப்பு அரசியலை கையில் எடுத்திருப்பது வேதனையாக உள்ளது. ஒரே தெருவில், ஒரே சந்தில் வாழும் வேட்பாளர்கள், தேர்தல் என வந்ததும் இப்படி கேடுகெட்ட பிரச்சார உத்தியை பயன்படுத்துவது பேரதிர்ச்சி தான். நான் இது செய்தேன், இவற்றை செய்ய போகிறேன், இந்த வார்டில் உள்ள எல்லோருமே நமது குடும்பம் தான் என கூறி வாக்குகளை சேகரிப்பது தவறல்ல. யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கின்றனர். அவர்களிடம் குடும்ப அரசியலும் வெறுப்பு அரசியலும் எடுபடாது. வேட்பாளர்களே! ஒத்த ஓட்டு பாஜக லிஸ்ட்டில் சேர்ந்துவிடாதீர்.

Your reaction