அதிரை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்திய கையோடு அவசர கதியில் வார்டுகளை மறுவரையரை செய்ததில் குளறுபடிகள் நிகழ்ந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிரையின் மக்கள் தொகைக்கு ஏற்ப 33 வார்டுகளை உருவாக்காமல் வெறும் 27 வார்டுகளுடன் அதிகாரிகள் நிறுத்திவிட்டனர். இதனை கண்டித்து சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இந்நிலையில் அதிரை நகராட்சி வார்டு குளறுபடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் Z.முகம்மது தம்பி தொடுத்த வழக்கின் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அதிரை நகராட்சிக்கான தேர்தல் தள்ளிப்போகுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Your reaction