Wednesday, April 24, 2024

ஒமிக்ரான் : புதிய கட்டுப்பாடுகள்- ஊரடங்கு அமல் !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது

இரவு 10 மணி முதல் அதிகாலை 5மணிவரை அமலில் இருக்கும் எனவும் கூறியுள்ளது.

அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை என அதில் குறிப்பிட்டு உள்ளது.

மருத்துவம் தவிர, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இரவு நேர ஊரடங்கின் போது, மாநிலத்திற்குள் அரசு, தனியார் பேருந்து சேவை தொடரும் என்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறரர்.

பொது பேருந்து, புறநகர் ரயில்களில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.

1 முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்பு ரத்து என முதல்வர் கூறியுள்ளார்

10,11,12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்பு நடைபெறும் எனவும் அறிவிப்பு.

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அரசியல் கூட்டங்களுக்கு தற்போதுள்ள தடை தொடரும்

ஞாயிற்றுக் கிழமைகளில் பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது.

ஞாயிறு அன்று உணவகங்களில் பார்சல் சேவை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி.

உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி.

ஞாயிறு, இரவு நேரங்களில் வெளியூர் பயணம் செய்ய இ பாஸ் அமல் படுத்தப்படும் என அரசு கூறியுள்ள புதிய வழிகாட்டு அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...