தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. அதிரையின் பெரும்பாலான குளங்கள் கனமழையால் நிரம்பி வழிகின்றன. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது.
இந்நிலையில் ஏரிப்புரக்கரை ஊராட்சிக்குட்பட்ட பிலால் நகரில், நகர் முழுவதும் மழைநீர் புகுந்து மிதக்கின்றது. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
பருவமழை காலத்தில் வடிகால்களை தூர்வாராததே பிலால் நகரின் அவலநிலைக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முறையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து காலதாமதம் செய்யும் ஆர்டிஓ, வட்டாட்சியர் ஆகியோரை கண்டித்து தற்போது பிலால் நகர் பெட்ரோல் பங்க் அருகில் ஈசிஆர் சாலையில் மறியல் போராட்டம் நடக்கிறது.
Your reaction