தமிழகத்தில் கிராம, ஒன்றிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கு இன்னமும் தேர்தல் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக தங்கள் பகுதியின் குறைகளை யாரிடம் முறையிடுவது என தெரியாமல் மக்கள் திக்குமுக்காடி கடும் கடுப்பிலும் வெறுப்பிலும் உள்ளனர். இதனிடையே, இந்த மாத இறுதிக்குள் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிரை நகராட்சி தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. கஜா புயல் நிவாரணம், மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருவதால் மக்கள் நிச்சயம் தங்களை ஆதரித்து வெற்றிபெற செய்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

Your reaction