அதிராம்பட்டினம் செக்கடி குளக்கரையில் இருக்கிறது சஹீது அப்பாஸ் ஹாஜியார் படிப்பகம்.
படிக்கம் என்ற பெயரில் இளைஞர்கள் கேரம் விளையாடி வந்தனர்.
ஆனால் பல ஆண்டுகளாக பயன்பாடு இன்றி பூட்டியே கிடக்கும் அவ்விடத்தை இளைஞர்கள் பயன்படுத்தும் நோக்கில் உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த முயற்ச்சிக்கு செக்கடி பள்ளி நிர்வாகம் இசைவு தெரிவிக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இந்த படிப்பகம் செக்கடி நடை மேடையை ஒட்டிய பகுதியாக இருப்பதால் இலவச உடற்பயிற்சி கூடம் அமைத்து இளைஞர்களை ஊக்கப்படுத்த தனவந்தர்கள் தயாராக இருந்தும் நிர்வாகம் காட்டும் மெத்தன போக்கால் இளைஞர்கள் கட்டண உடற்பயிற்சி கூடத்தை நாடுகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, சீரழிந்து கொண்டுள்ள இளைய சமுதாயத்தை வார்த்தெடுக்க இது போன்ற நடைமுறைகளை சாத்தியப்படுத்த வேண்டும்.
என நடை பயிற்ச்சியாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செவி சாய்க்குமா செக்கடிப்பள்ளி நிர்வாகம் ?
செக்கடிப்பள்ளி நிர்வாகத்திற்கு என்னதான் நாம அட்வைஸ் அல்லது நல்ல கருத்துக்களை சொன்னாலும் அதை அவர்கள் மெத்தனப்போக்காக தான் கையாளுவார்கள், நீ சொல்லி நான் கேட்கவா என்கிற அகங்காரம்,உடைய ஆட்கள் நிறைய பேர் செக்கடிப்பள்ளி நிர்வாகத்தில் இருப்பதால் தான் பெரும்பாலான இளைஞர்கள் அங்கு செல்வதுமில்லை, கருத்துக்களை கூறினால் அதை நிர்வாகம் (சின்ன பசங்க உங்களுக்கு என்னாப்பா தெரியும்) என்று பெரிதாக எடுத்துக் கொள்வதுமில்லை.!