பாஜக வணிக பிரிவு அமைப்பாளர் மீது நடவடைக்கை பாயுமா?
புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் வேலைக் கேட்டு வந்த திருச்சியை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூக இளைஞர் சதீஸ்குமார் (34) என்பவரைப் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர் பாஜக வணிகப் பிரிவு அமைப்பாளர் ராஜ மெளரியாவும் அவரது ஆட்களும். அந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
மேட்டுப்பாளையம் காவல்துறையினர் குற்றவாளிகள் மூவர் மீது இ.த.ச. 307 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. பாஜக ராஜ மெளரியாவை கட்சியை விட்டு நீக்கி தன் கடமையை முடித்துக் கொண்டது.
அரசும் காவல்துறையும் இவ்வழக்கில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட இளைஞரின் மருத்துவ செலவை அரசே ஏற்க வேண்டும். உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Your reaction