அதிரை லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு ! பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பாராட்டு!!

678 0


அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்ப்பு நிகழ்ச்சி சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

முன்னாள் தலைவர் லயன் அப்துல் ஜலீல் தலைமையில் நடைபெற்ற விழாவில் சூப்பர் M.அப்துல் ரஹ்மான் புதிய தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

செயலாளராக குப்பாஷா M. அஹமது கபீர் பொருளாளராக A முஹம்மது ஆரிஃப் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக நியமனம் செய்து வைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு முன்னாள் மாவட்ட ஆளுநர் PMJF முஹம்மது ரஃபி பதவி பிரமாணம் செய்து வைத்து வாழ்த்தினார்.

அதிராம்பட்டினத்தில் சேவை அடிப்படையிலான் பல்வேறு துறைகளில் சாதித்து வரும் அமைப்புகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அதில் அதிரையின் செய்திகளை அரசுக்கும், மக்களுக்கும் வழங்கிவரும் எமது அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி ஊடகத்தை பாராட்டி சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது. இதனை அதிரை எக்ஸ்பிரஸ் ஊடக பங்களிப்பாளர் பெற்றுகொண்டனர்.

இதேபோல் கொரோனா காலகட்டங்களில் தினமும் சுமார் 1500 நபர்களுக்கு இலவச உணவு வழங்கிய தன்னார்வ தொண்டு அமைப்பினர், அவசர ஊர்தி சேவையை பாராட்டி அதிராம்பட்டினம் நகர தமுமுக அவசர ஊர்தி குழுவினர்கல்ளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இறுதியாக பொருளாதாரத்தில் நலிந்த ஏழை குடும்பங்களுக்கு தையல் இயந்திரம்,அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் இரண்டாம் கட்ட துணைநிலை ஆளுநர் மு இமயவரம்பன், மணிவண்ணன் அதிராம்பட்டினம் பேராசிரியர் செய்யது அகமது கபீர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: