தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மெக்கானிக் கருப்பையா என்பவர் நேற்று(20/05/2021) கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த அவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என அவரின் குடும்பத்தினர் தமுமுக-வினரிடம் வேண்டுகோள் விடுத்துனர். இதனையடுத்து தேனி மாவட்ட தமுமுக தலைவர் அப்துல்லாஹ் பத்ரி தலைமையிலான தமுமுக குழுவினர், பாஜக பிரமுகர் மெக்கானிக் கருப்பையாவின் உடலை தேவதானப்பட்டி இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்.
கொரோனா தொற்றால் உயிரிழந்த பாஜக பிரமுகரின் உடலை தமுமுகவினர் அடக்கம் செய்தது, அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வடமாநிலங்களில் மதத்தை வைத்து வெறுப்பு விதைக்கப்பட்டுவரும் நிலையில், தமிழகமோ அதற்கு நேர் மாற்றாக மதங்களை கடந்த மனிதநேயமே சிறந்தது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது… இனியும் நிரூபிக்கும்!
Your reaction