பரவி வரும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டே செல்கிறது .அரசும் தனது பங்கிற்கு போதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றன.ஆனால் இதனை செவிமடுக்காத இளைஞர்கள் வழக்கம் போல வீதிகளில் சுற்றி திரிகிறார்கள்.இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அதிராம்பட்டிணம் காவல்துறை- பேரூர் நிர்வாகம்- சமூக ஆர்வலர்கள் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.அப்போது முக கவசமின்றி சுற்றிய வாலிபர்களுக்கு அறிவுறை கூறி காவல் துறையினர் அனுப்பி வைத்தனர்.வீடில்லா வழிப்போக்கர்களுக்கு முக கவசம் துண்டு பிரசுரம் வழங்கி பாதுகாப்புடன் இருக்க வலியுறுத்தப்பட்டது.முன்னதாக பேரூந்து நிலையத்தில் நடைப்பெற்ற பிரச்சார வாகன அறிமுக நிகழ்வில் காவல் துணை ஆய்வாளர் பூபதி கலந்து கொண்டு விழிப்புணர்வு குறித்து பேசினார்.இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் அப்துல் காதர்,காமீல்,நவாஸ், நிஜாம்,கஜ்ஜாலி முஹம்மது இவர்களுடன் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில் குமரகுரு, கோபி, அலெக்ஸாண்டர் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

Your reaction