தமிழகத்தில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த மாநில அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த பணிகளை மாவட்டங்கள்தோறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். முதலமைச்சரின் இந்த செயல்பாடு பொதுமக்களுக்கு ஒருவித நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதிரையில் நடைபெற கூடிய சில திருமணங்களில் அரசு விதிகளை மீறி பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்பது கவலைக்குரியதாகும். இதனால் நோய் தொற்று பரவல் அதிவேகமாகும் அபாயம் உள்ளது. இதனால் திருமண நிகழ்வில் அரசு வகுத்துள்ள விதிகளின்படி 50 பேர் மட்டுமே பங்கேற்பதை திருமண வீட்டார் உறுதி செய்ய வேண்டும். இது சமுதாயத்திற்கு தாங்கள் செய்யும் மிகப்பெரிய கடமையாகும்.
Your reaction