ஹிஜ்ரி 1442 ரமலான் பிறை 1 முதல் 20 வரை அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் இஸ்லாமிய கேள்வி-பதில் போட்டி நடத்தப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதனிடையே முதலிடம், இரண்டாம் இடம் மற்றும் ஆறுதல் பரிசுகளுக்கு தகுதியானவர்களை அதிரை எக்ஸ்பிரஸ் ஒருங்கிணைப்பு குழு தேர்வு செய்துள்ளது. முன்னதாக மார்க்க அறிஞர்கள், பிரபல ஊடகவியாளர், சமூக சேவகர் உள்ளிட்டோரை அழைத்து மே 17ம் தேதி நிகழ்ச்சி நடத்தி வெற்றியாளர்களை அறிவிப்பு செய்து பரிசு அளிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் கொரோனா முழு ஊரடங்கு காரணமாக தற்போது அந்த நிகழ்ச்சி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. இறைவன் நாடினால் விரைவில் தேதி, நிகழ்ச்சி நடைபெறும் இடம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். இணைப்பில் இருங்கள், அதிரையர்களின் இணையதுடிப்புடன்…

Your reaction