தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மு.கருணாநிதியால் திமுக ஆட்சிகாலத்தில் பட்டுக்கோட்டை சுண்ணாம்புகார தெருவில் கட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களை சந்திப்பேன் என கா.அண்ணாதுரை உறுதியளித்திருந்தார். மேலும் தனது பணியினை முழுமையாக இவ்வலுவலகத்தில் இருந்து செய்வேன் எனவும் கூறியிருந்தார். அதை செயல்படுத்தும் நோக்கத்தில் 17.05.2021 ( திங்கள்கிழமை ) முதல் பட்டுக்கோட்டை சுண்ணாம்புக்கார தெருவில் அமைந்துள்ள அரசு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தனது பணியை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை துவங்க திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் அவரை பொதுமக்கள் எளிதில் சந்திக்க முடியும் என கருதப்படுகிறது.


Your reaction