தமிழகத்தில் பெருநாள் கொண்டாட்டம் : அமைச்சர் அவசர வேண்டுகோள்!

1310 0


தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரமலான் (14/05/2021) பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்” என்று இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வந்திருக்கிறது. கரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருவதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அந்த ஊரடங்கு 10/05/2021 முதல் 24/05/2021 வரை நடைமுறையில் இருந்து வருகிறது.

அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “முழு ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிப்பீர்” என்று ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கரோனா நோய்த் தொற்றும், அதைத் தடுக்க ஊரடங்கும் நடைமுறையில் இருக்கின்ற இந்தத் தருணத்தில், அனைத்து சமயங்களைச் சார்ந்தவர்களும், மதம் சார்ந்த விழாக்களையும் தவிர்த்து, தொற்றைக் குறைக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.

சிறுபான்மையின மக்கள் மீது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையையும் நன்கு அறிந்த இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் இந்த ரமலான் பண்டிகையை தங்களது இல்லங்களிலேயே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து, தனிமனித இடைவெளி விட்டு ரமலான் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: