தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிப்பு! நாளை ஊரடங்கு ரத்து!

700 0


தமிழகத்தில் வரும் 10-ம் தேதி காலை 4 மணி முதல் 24-ம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக இருக்கும் சூழலில், தமிழகத்திலும், வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது. தலைநகர் சென்னையிலும் மிக மோசமாக வைரஸ் பரவி வருகிறது.

இந்த சூழலில், கொரோனா முதல் அலையின் போது, லாக் டவுன் அமல்படுத்தப்பட்டது போன்று, இப்போதும் முழு லாக் டவுன் போட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில், தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற பிறகு கொரோனா தடுப்பு பரவல் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி வரும் மே.10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் வரும் 10-ம் தேதி காலை 4 மணி முதல் 24-ம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று(மே.8) மற்றும் நாளை(மே.9) காலை 6 முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்படும். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ள தேவையான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க 26.04.2021 முதல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். Dunzo போன்ற மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய நண்பகல் 12.00 மணி வரை அனுமதிக்கப்படும். மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: