Thursday, March 28, 2024

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!(முழு பட்டியல்)

Share post:

Date:

- Advertisement -

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெருவெற்றி பெற்றதையடுத்து நாளை தமிழக முதல்வராகப் பதவியேற்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அவருடன் 33 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்க இருக்கிறது.

இந்நிலையில், தமிழக அமைச்சரவை பட்டியல் சற்று முன்பு வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சரவை பட்டியல் முழு விவரம் :

மு.க. ஸ்டாலின் – முதலமைச்சர்(பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன்)

துரைமுருகன் – நீர்வளத்துறை அமைச்சர்(சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத்திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்)

கே.என்.நேரு – நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் (நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்)

இ.பெரியசாமி – கூட்டுறவுத்துறை அமைச்சர்(கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்)

க.பொன்முடி – உயர்கல்வித்துறை அமைச்சர்(உயர்கல்வி உள்ளிட்ட தொழிற்கல்வி, மின்னனுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்)

எ.வ.வேலு – பொதுப்பணித்துறை அமைச்சர்(பொதுப்பணிகள்(கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் – வேளாண்மைத்துறை அமைச்சர்(வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண் பணிக்கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை, கரும்புப்பயர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு)

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் – வருவாய்த்துறை அமைச்சர்(வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை)

தங்கம் தென்னரசு – தொழில்துறை அமைச்சர்(தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் பல தமிழ் பண்பாட்டுத்துறை, தொல்பொருள்)

எஸ்.ரகுபதி – சட்டத்துறை அமைச்சர்(சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம்)

சு.முத்துசாமி – வீட்டு வசதித்துறை அமைச்சர்(வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகரமைப்புத்திட்டமிடல் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, இடவசதிக் கட்டுப்பாடு, நகரத்திட்டமிடல், நகர் பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்)

கே.ஆர்.பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்(ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரக கடன்கள்)

தா.மோ.அன்பரசன் – ஊரகத் தொழில்துறை அமைச்சர்(ஊரக தொழில்கள், குடிசைத் தொழில்கள் உள்பட சிறு தொழில்கள், குடிசை மாற்று வாரியம்)

மு.பெ.சாமிநாதன் – செய்தித்துறை அமைச்சர்(செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சு காகித கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுச்துறை மற்றும் அரசு அச்சகம்)

கீதா ஜீவன் -சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்(மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்)

அனிதா ராதாகிருஷ்ணன் – மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்(மீன்வளம், மீன் வளர்ச்சிக் கழகம் மற்றும் கால்நடைகள் பராமரிப்பு)

ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் – போக்குவரத்துத்துறை அமைச்சர்(போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்தி சட்டம்)

கா.ராமச்சந்திரன் – வனத்துறை அமைச்சர்(வனம்

அர. சக்கரபாணி – உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் (உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலை கட்டுப்பாடு)

வி.செந்தில்பாலாஜி – மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்(மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு(மொசாலஸ்)

ஆர்.காந்தி – கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்(கைத்தறி மற்றும் துணிநூல், கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்)

மா.சுப்பிரமணியன் – மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்(மக்கள் நல்வாழ்வு, மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலன்)

பி.மூர்த்தி – வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்(வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் உள்ளிட்ட சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு)

எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்(பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்)

பி.கே.சேகர்பாபு – இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்(இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்)

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் – நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்(நிதித்துறை, திட்டம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம், அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியச் சலுகைகள்)

சா.மு.நாசர் – பால்வளத்துறை அமைச்சர்(பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி)

செஞ்சி கே.எஸ்.மஸ்தான் – சிறுபான்மையினர், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்(சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வக்ஃப் வாரியம்)

அன்பில் மகேஸ் பொய்யாமொழி – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்(பள்ளிக் கல்வி)

சிவ.வீ. மெய்யநாதன் – சுற்றுச்சூழல், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்(சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை)

சி.வி.கணேசன் – தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்(தொழிலாளர்கள் நலன், மக்கள்தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு)

மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்(தகவல் தொழில்நுட்பம்)

மா.மதிவேந்தன் – சுற்றுலாத்துறை அமைச்சர்(சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்)

கயல்விழி செல்வராஜ் – ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்(ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் தொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...