ட்ராஃபிக் ராமசாமி காலமானார் !

847 0


சமூக ஆர்வலர் ட்ராஃபிக் ராமசாமி சற்றுமுன்னர் உடல் நலகுறைவால் காலமானார்.

சென்னை, பாரி முனையின் போக்குவரத்தை ஒழுங்குப் படுத்துவதில் காவல்துறைக்கு உதவி செய்து தமது சமூக பணியை ஆரம்பித்துள்ளார், ராமசாமி.

தமிழக சமூக ஆர்வலர்களின் முன்னோடி என்று போற்றப்படுபவர்.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

2015 ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடை தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

2015 ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் வேட்பாளராக தனித்து நின்றார்.

இவருக்கு பக்கபலமாக இருந்து வந்த பாத்திமா என்ற சமூக ஆர்வலர் ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்தார்.

அதில் நிலை குழைந்த ராமசாமிக்கு பொதுவாழ்வில் இருந்து சற்று தொய்வு ஏற்பட்டது.

பல்வேறு பொது நல வழக்குகள் போடப்பட்ட நேரத்தில் எதிரிகளால் தாக்குதலுக்கு உள்ளான ராமசாமி தொடர் போராட்டங்கள் மூலமாக பல வெற்றிகளை கண்டவர்.

குறிப்பாக அதிராம்பட்டினம் அகல ரயில் பாதை தொடர்பாக ரயில்வே இலாகா மீது வழக்கு தொடர சட்ட ரீதியிலான அனைத்து உதவிகளையும் செய்தவர் என்பது குறிப்பிடதக்கது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: