திமுக வேட்பாளர்களிடம் தோல்வியடைந்த 11 சிட்டிங் அமைச்சர்கள்!

865 0


பெரும் எதிர்பார்ப்புடன் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 11 அமைச்சர்கள் திமுக வேட்பாளர்களிடம் தோல்வியை சந்தித்துள்ளனர்.

அனைத்து அமைச்சர்களையும் தோற்கடிக்க வேண்டும் என தேர்தல் பரப்புரையின்போது கூறியிருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தற்போது வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையில், திமுக வேட்பாளர்களிடம் 11 அமைச்சர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.

◆அதிமுக அரசில் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக வலம் வந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக வேட்பாளர் ஆர்.மூர்த்தியிடம் தோல்வியடைந்தார். திமுகவின் மூர்த்தி 63 ஆயிரத்து 811 வாக்குகளும், ஜெயக்குமார் 36 ஆயிரத்து 224 வாக்குகளும் பெற்றனர். இதன்மூலம் 27 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மூர்த்தி வெற்றிபெற்றார்.

◆விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி. சண்முகம், திமுக வேட்பாளர் லட்சுமணனிடம் 14 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

◆கடலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் அய்யப்பன், அமைச்சர் எம்.சி. சம்பத்தை 5 ஆயிரத்து 151 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். எம்.சி சம்பத் 79 ஆயிரத்து 412 வாக்குகளும், அய்யப்பன் 84 ஆயிரத்து 563 வாக்குகளும் பெற்றனர்.

◆ராசிபுரம் தொகுதியில் அமைச்சர் சரோஜா, ஜோலார்பேட்டை தொகுதியில் அமைச்சர் கே.சி.வீரமணி, சங்கரன்கோவில் தொகுதியில் அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோரும் திமுக வேட்பாளர்களிடம் தோல்வியை எதிர்கொண்டனர்.

◆ஆவடி தொகுதியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜனை விட, திமுக வேட்பாளர் சா.மு.நாசர் 54 ஆயித்து 695 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார்.

◆சிவகாசியிலிருந்து தொகுதி மாறி ராஜபாளையத்தில் களம் கண்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தோல்வி அடைந்துள்ளார். ராஜேந்திரபாலாஜி 69 ஆயிரத்து 991 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் தங்கபாண்டியன் 73 ஆயிரத்து 780 வாக்குகள் பெற்று, 3 ஆயிரத்து 789 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

◆திருச்சி கிழக்கு தொகுதியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை, 53 ஆயிரத்து 797 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தோற்கடித்தார்.

◆கரூர் தொகுதியில் போக்குவரத்துறை அமைச்சரான எம்.ஆர். விஜயபாஸ்கரை வீழ்த்தி, திமுக வேட்பாளரும் முன்னாள் போக்குவரத்துதுறை அமைச்சருமான செந்தில் பாலாஜி வெற்றிபெற்றார்.

◆மதுரவாயல் தொகுதியில் அமைச்சர் பெஞ்சமின் திமுக வேட்பாளர் காரம்பாக்கம் கணபதியிடம் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: