இறுதி கட்டத்தை நெருங்கும் அதிரை எக்ஸ்பிரஸ் கேள்விகள் : போட்டியாளர்களே இனி தான் கவனம் தேவை!!

1015 0


அதிரை எக்ஸ்பிரஸ் – ன் 15 ம் ஆண்டு துவக்க விழாவை சிறப்பிக்கும் வண்ணமாக இந்த 2021 ரமலான் மாதத்தில் நேயர்களுக்கு கேள்வி பதில் போட்டியை அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி குழுமம் நடத்தி வருகிறது.

அதிரை மட்டுமல்லாது பட்டுக்கோட்டை, மதுக்கூர்,பரங்கிப்பேட்டை, , முத்துப்பேட்டை, , குடவாசல், திருவாரூர், காயல்பட்டினம், காரைக்குடி, புளியங்குடி, கூத்தாநல்லூர், விருத்தாச்சலம், வி.களத்தூர், தேனீ கம்பம், மல்லிப்பட்டினம், மன்னார்குடி, சேதுபாவா சத்திரம், அறந்தாங்கி, கடையநல்லூர் போன்ற பல்வேறு ஊர்களில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்துக் கொண்டு தங்களது மார்க்க அறிவுத் திறனை வெளிக்கொண்டு வருகின்றனர்.

அதிரை எக்ஸ்பிரஸ் கேள்வி பதில் போட்டியில் ஒவ்வொரு நாளும் 4 கேள்விகள் கேட்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் பிறை 11 ல் இருந்து 5 கேள்விகள் வீதம்  தினசரி கேட்கப்பட்டு பிறை 2௦ அன்று போட்டிகள் முழுமையாக முடிவு பெற உள்ளது.

இன்னும் 10 நாட்களில் கேள்வி பதில் போட்டி முடிவு பெற உள்ள நிலையில்,  போட்டியாளர்கள் இனி கேட்கப்படும் கேள்விகளுக்கு மிக கவனமாக கேள்விகளை எதிர்கொண்டு தங்களது பதில்களை சரியாக அனுப்புமாறு அதிரை எக்ஸ்பிரஸ் கேட்டுக் கொள்கிறது.

இந்த கேள்வி பதில் போட்டியில் முதல் பரிசை வெல்லும் நபருக்கு தங்க நாணயமும், இரண்டாமிடம் பெரும் நபருக்கு மிக்சியும் வழங்கப்பட உள்ளது.

தொடர்ச்சியாய் இந்த கேள்வி பதில் போட்டியில் தவறாமல் பங்கு கொள்ளும் நபர்களுக்கு ஆறுதல் பரிசுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.

இனி வரும் கேள்விகளுக்கு கவனத்தோடு பதிலிளித்து மதிப்பெண் பட்டியலில் முன்னேறுங்கள்.. அனைத்து போட்டியாளர்களையும் வாழ்த்துவதில் அதிரை எக்ஸ்பிரஸ் பெருமிதம் கொள்கிறது.

அதிரை எக்ஸ்பிரஸ் ரமலான் கேள்வி பதில் போட்டியில் நீங்கள் முதல் டைட்டில் வின்னராக வாழ்த்துக்கள்..!! வெற்றி பெறுங்கள்..!!

-பொறுப்பாசிரியர்,

அதிரை எக்ஸ்பிரஸ்

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: