அதிராம்பட்டினம் நகர திமுக சார்பில் வேட்பாளர் பரப்புரை பேரணி இன்று மாலை அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான இரு சக்கர வாகனங்கள் கலந்து கொண்ட பேரணி தன் எழுச்சியாக நடைபெற்றது.
இதில் கூட்டணி கட்களின் கொடிகள் தாங்கிய வாகனங்கள் அணிவகுத்து சென்றன இதில் முக்கிய கூட்டணியான முஸ்லீம் லீக்கின் கொடி மட்டும் இடம் பெறவில்லை இச்செயல் முஸ்லீம் லீக் அனுதாபிகள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.
பரப்புரை தொடர்பாக நகர திமுகசார்பில் முன்கூட்டியே முஸ்லீம் லீக் நிர்வாகிகள் இடத்தில் தெரியப்படுத்தியும் இப்பேரணியில் முஸ்லீம் லீக் கலந்து கொள்ளாதது ஏன் என பரப்புரையில் கலந்துகொண்ட கூட்டணி கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.
Your reaction