இந்தியாவில் சில வாரங்களாக குறைந்திருந்த கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் பரவி வரும் கட்டுக்கடங்காத கொரோனா காரணமாக அம்மாநிலத்தில் பல இடங்களில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்திலும் கொரோனா தொற்று சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவிலிருந்து சற்றே இயல்பு நிலைக்கு திரும்பி வந்த நிலையில், மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 800க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதுகுறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் வரும் 17ஆம் தேதி புதன்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது கொரோனா பரவல் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Your reaction