தமது அரசியல் கணக்கை துவங்கியது SDPIகட்சி !!

921 0


சோஷியல் டெமாக்ரெட்டி பார்ட்டி ஆஃப் இந்தியா எனும் தேசிய அளவிலான கட்சி கடந்த 2009 ஆண்டு துவக்கப்பட்டு 2010 ஆண்டு அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்து உள்ளது .

இதன் நீட்சியாக தமிழகம் மட்டுமால்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கால் பதித்துள்ள இக்கட்சி, மக்களின் அன்றாட பிரச்சனைகளில் அக்கரை கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேவையாற்றி வருகிறது.

பசியில் இருந்து விடுதலை பயத்தில் இருந்து விடுதலை என்ற கொள்கையை வகுத்து ஜாதி,மத,இன அரசியலுக்கு அப்பால் மானிடம் காக்க மகத்தான முன்னெடுப்புகளை செய்து வருகிறது. இதனால் இதனால் ஈர்க்கப்பட்ட வெகுஜன மக்கள் தமது ஆதரவு கரங்களை SDPIகட்சிக்கு வழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் நடக்கவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தில் சுமார் 100 இடங்களில் தனித்து போட்டியிட எத்தனித்து அதற்கான பூர்வாங்க பணிகளை ஆரம்பித்து விட்டது.

அதன் ஒரு பகுதியாக பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட போவதாக இன்றுகாலை SDPI கட்சிக்கு ஆதரவு தாரீர் என்ற வாசகத்துடன் சுவரொட்டிகள் தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டு உள்ளன.

இதனால் தமிழகத்தில் தேர்தல் சூடு அனல் பறக்க ஆரம்பித்து உள்ளது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: