பாஜக ஆர்ப்பாட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாக பேசி, மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கல்யாணராமனை கண்டித்தும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் அதிரையில் நாளை மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அதிரை பேருந்து நிலையத்தில் நாளை வெள்ளிக்கிழமை (05/02/2021) அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிரை ஹாரூன் மௌலானா, மருது மக்கள் இயக்க நிறுவனர் செ. முத்துப்பாண்டி, மதநல்லிணக்க பேச்சாளர் அய்யாவழி பாலமுருகன் ஆகியோர் கண்டன உரை ஆற்ற உள்ளனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அதிரை அனைத்து முஹல்லா மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இடம் : பேருந்து நிலையம், அதிராம்பட்டினம்
நேரம் : அஸர் தொழுகைக்கு பிறகு
Your reaction