தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஜனவரி மாதத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்திலேயே அதிரையில் தான் 13.5 செ.மி மழை பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த கனமழையால் அதிரை சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் வீடுகளில் தங்கி இருந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

Your reaction