Tuesday, April 23, 2024

பத்திரிக்கையாளர்களை மிரட்டும் பாமகவினர் !

Share post:

Date:

- Advertisement -

அன்புமணியை கேள்வி கேட்ட ஜெயா டிவி நிருபர் மீது காரை ஏற்றி தாக்குதல்!

தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி டிசம்பர் 1ஆம் தேதி முதல் முதற்கட்ட தொடர் போராட்டம் நடத்தவும் ஜனவரி மாதத்தில் இரண்டாம் கட்ட அறப்போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் பாமக தெரிவித்திருந்தது.

இதனிடையே பாமக நிர்வாகிகளை முதல்வர் பழனிசாமி பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். அப்போது பாமக சார்பில் மாவட்ட நிர்வாகிகள் குழுவுடன் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் முதல்வர் பழனிசாமியை தலைமை செயலகத்தில் சந்தித்த பின்னர் செய்தியாளர்களை அன்பு மணி சந்தித்தார்.

அப்போது, நிருபர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக தொண்டர்கள் சாலையில் போக்குவரத்து நெரிசல் உண்டாக்கியது குறித்தும், வாகனங்கள் மீது தாக்குதல் மற்றும் சாலை தடுப்புகளை தகர்த்ததை குறித்தும் கேட்டதற்கு, நீ எந்த தொலைகாட்சி என வியனவியுள்ளார். அதற்கு எந்த டிவியா இருந்தா என்ன சார் கேள்விக்கு பதில சொல்லுங்க என வினவியுள்ள்ளனர் நிருபர்கள்.

இதனால் பாதியிலேயே பேட்டியை முடித்துக்கொண்ட அன்புமணி காரை நோக்கி நடந்தார் விடாத நிருபர்கள் பின் தொடர்ந்து கேள்வியை எழுப்பி சென்றுள்ளனர்.  அந்த நேரத்தில் எதிரே நின்ற ஜெயா தொலைகாட்சியின் கேமரா மேனின் காலில் அன்புமணியின் கார் ஏரியது. இதனையும் பொருட்படுத்தாத அன்பு மணி காரில் பறந்துள்ளார்.

பின்னர் நிருபர்களை பார்த்து தொண்டர் ஒருவர் ஒருமையில் பேசியதாகவும் அங்கு நின்றிருந்த பாமகவின் ஜிகே மணி சமாதானம் படுத்தியதாகவும் தெரிய வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...