Friday, April 19, 2024

புதிய காற்றழுத்தம் புயலாக மாறி டிசம்பர் 2ல் கரையை கடக்கும் – எச்சரிக்கும் வானிலை மையம் !

Share post:

Date:

- Advertisement -

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இது குறைந்த காற்றழுத்தமாக மாறும். இந்த காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், தென் கடலோர ஆந்திரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசும். அந்த காற்றழுத்தம் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் டிசம்பர் 2ம் தேதி நாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் சென்னை, கடலூர், புதுச்சேரியை சூறையாடி சென்றுவிட்டது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் பல ஆறுகள் உயிர்பெற்றுள்ளன. பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் பெருகியுள்ளது.

நூற்றுக்கணக்கான ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏரிகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. சென்னையின் புறநகர் பகுதிகளிலும் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக தமிழக கடலோரப் பகுதியில் கோடியக்கரை முதல் சென்னை வரை பலத்த மழை கொட்டித் தீர்த்தது. கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பலமாவட்டங்கள் நிவர் புயலின் கோரத்தாண்டவத்திற்கு பாதிக்கப்பட்டுள்ளன.

நிவர் கரையை கடந்த புதுச்சேரி மாநிலத்திலும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் வெள்ளம் எப்போது வடியும் என்று தெரியாது. மக்களின் இயல்பு நிலை எப்போது திரும்பும் என்று யாராலும் சொல்ல முடியாத நிலையில் இருக்கும் இந்த சூழ்நிலையில் மீண்டும் ஒரு புயல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வங்கக்கடலில் மற்றுமொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று நாளை குறைந்த காற்றழுத்தமாக மாறும். இதன் காரணமாக ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் தெற்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும்.

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி நவம்பர் 30ம் தேதி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர் 1 முதல் 3ம் தேதி வரை தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், தென் கடலோர ஆந்திரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசும். பின்னர் அந்த காற்றழுத்தம் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் டிசம்பர் 2ம் தேதி நாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...