அரசியல் தலைவர்கள் சமூக ரீதியிலான பிரிவினைக்கு எதிராக போர் முரசாக ஒலித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கட்சி பதவி, தேர்தல் என வரும்போது அவர்கள் தடமாறுவதை காணமுடியும். மக்கள் மனதில் எதிர்கட்சிகள் தேவையற்ற எண்ணங்களை விதைத்து ஓட்டை பிரித்துவிடுவார்களோ என அஞ்சும் நிலையை அது பறைசாற்றும்.
இதேநிலை தான் அதிரையிலும். கையை உயர்த்தி ஐந்து விரல்களை விரித்துக்காட்டும் திராவிட கட்சி ஒன்றில் பேரூராட்சி தலைவர் பதவி ஒருசாராருக்கும் கட்சி நகர செயலாளர் பதவி மற்றொரு சாராருக்கும் என்ற எழுதப்படாத விதி அமலில் உள்ளது.
இந்த விதியை மாற்ற ஆரம்பம் முதலே இருசாராரும் போட்டி போட்டுக்கொண்டு மேலிடத்தை சால்வையுடன் சந்தித்து வருகிறார்கள். ஆனால் உள்ளூர் அரசியல் களத்தை ஹோம் வொர்க் செய்து வைத்திருக்கும் தலைமை தனது முடிவை சொல்லாமல் இருதரப்பையும் எந்நேரமும் சூடாகவே வைத்துள்ளது.
மொத்தத்தில் கழக நிர்வாகிகள் மத்தியில் கலகம் வரக்கூடாது என்பதே தலைமையின் எதிர்பார்ப்பு.
கலகத்தை தவிர்க நகர செயல் செயலாளர் பதவி உருவாக்கப்படுமா?
Your reaction