Friday, March 29, 2024

புடவை மாற்றுவதைப்போல கட்சி மாறும் குஷ்பு -மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா!

Share post:

Date:

- Advertisement -

சினிமாவில் பிரபல நாயகியாக இருந்த வந்த நடிகை குஷ்பு கடந்த 2010ம் ஆண்டு தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அடுத்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனக்கு சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்த்த அவருக்கு திமுக அப்படியான வாய்ப்பை வழங்கவில்லை.

இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த அவர், சில ஆண்டுகள் இடைவெளியில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அங்கு செய்திதொடர்பாளர் என்ற முக்கிய பொறுப்பை பெற்று பணியாற்றி வந்த அவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சீட் கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்தார். ஆனாலும் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் அவர் வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் பாஜகவில் சேரப்போவதாக அடிக்கடி தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்பு அவர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். இதனால் காங்கிரஸ் தலைவர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில் குஷ்பு புடவை மாற்றுவதை போல் கட்சியை மாற்றுகிறார் என்று தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் சுதா குற்றம் சாட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...