Friday, April 19, 2024

உருவானது நிசார்கா புயல் !

Share post:

Date:

- Advertisement -

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது, மகாராஷ்டிரா – குஜராத் இடையே இந்த நிசார்கா புயல் நாளை கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை கேரளாவில் நேற்று தொடங்கி உள்ளது. இன்று கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்தியாவில் இனி அடுத்த நான்கு மாதங்கள் மழைக்காலம் ஆகும். இனி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பொழிவு அதிகமாகும். தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழையால் மழை அதிக அளவு பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது. இதற்கு நிசார்கா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த 12 மணி நேரத்தில் நிசார்கா தீவிர புயலாக மாறும் என்றும் கூறியுள்ளது. மேலும் நிசர்கா புயல் புதன்கிழமை (நாளை) பிற்பகல் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, மகாராஷ்டிரா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு குஜராத் கடற்கரையில் ஹரிஹரேஸ்வர் மற்றும் தாமனுக்கு இடையே அலிபாக் (ராய்ப்பூர்) அருகே நிசார்கா புயல் கரையை கடக்கக்கூடும் என்று தெரிவித்திருந்தது.

அடுத்த இரு நாட்களில் புயல் கரையை கடப்பதால் மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடற்கரையோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 – 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். லட்சத்தீவு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் சூறவாளி காற்று மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் மீனவர்கள் இந்த பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

நிசார்கா புயல் காரணமாக கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இனி வரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவின கோழிக்கோடு மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கொல்லம், மலப்புரம், எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர், இடுக்கி, காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று கேரளாவின், அருவிக்கராவில் பலத்த மழையால் அருவிக்கரா அணையில் கசிவு ஏற்பட்டது. இதனால் திருவனந்தபுரத்தின் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்க வழிவகுத்தது.கேரளாவில் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை, அதன் புறநகர் மாவட்டங்களான தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி மற்றும் மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் ஆகிய பகுதிகளுக்கு வானிலை மையம் ரெட் விடுத்துள்ளது. நிசர்கா சூறாவளி தற்போது மும்பையில் இருந்து 490 கி.மீ தொலைவிலும், கோவாவின் தலைநகரிலிருந்து 280 கி.மீ தொலைவிலும், குஜராத்தின் சூரத் மாவட்டத்திலிருந்து 710 கி.மீ தூரத்திலும் உள்ளது. கடுமையான சூறாவளி புயல் கடற்கரையை கடக்கும்போது 90-105 கி.மீ வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...