CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தை முன்னின்று நடத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீரான் ஹைதர் மற்றும் சபூரா ஜர்கர் ஆகியோரை மத்திய அரசு UAPA சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. நாடே கொரோனா வைரஸிற்கு எதிராக போராடி வரும் நிலையில், கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் சபூரா ஜர்கரை UAPA சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது, சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பிணி பெண் சபூரா ஜர்கரை UAPA சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. பலரும் சபூரா ஜர்கரை விடுதலை செய்ய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் அதிரையில் இன்று சபூரா ஜர்கரின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விடுதலை செய்யக்கோரியும் NO CAA, NRC, NPR என்று அச்சிடப்பட்ட மாஸ்க் வழங்கப்பட்டு வருகிறது. அதிரை குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு குழு சார்பில் வழங்கப்பட்டு வரும் மாஸ்க்கை அணிந்து பொதுமக்கள் பலரும் சபூரா ஜர்கரின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.







வீடியோ :
Your reaction