சென்னை: சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக திருநங்கை பிரித்திகா யாசினி பொறுப்பேற்றார்.
சேலத்தைச் சேர்ந்தவர் பிரித்திகா யாசினி. திருநங்கையான இவர், தமிழகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற காவல்துறை துணை ஆய்வாளர் பணிக்கான தேர்வை எழுதினார்.
இதில் அவர் தேர்ச்சி பெற்றார். அதன் மூலம் இந்தியாவின் முதல் திருநங்கை காவல் அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவருக்கு மாநகர காவல்துறை ஆணையர் சுமித்சரண் பணி நியமன ஆணையை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், வழங்கினார்.
இதையடுத்து ஓராண்டாக வண்டலூர் அருகே உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சி மையத்தில் யாசினி பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் எஸ்.ஐ.பணிக்கு தேர்வான பிரித்திகா யாசினி தருமபுரியில் பணி அமர்த்தப்பட்டுள்ளார். தற்போது சென்னை சூளைமேடு காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக அவர் பொறுப்பேற்றுள்ளார்
Your reaction