அதிராம்பட்டினம் பகுதிக்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் இயங்கி வருகிறது துறை சார்ந்த அலுவலகம், இங்கிருந்துதான் மின் வாரிய ஊழியர்கள் பணிக்கு செல்வர்.
இந்நிலையில் நுகர்வோர்கள் அதிகாரிகள் தொடர்புக்கு என பாரத் சஞ்சார் நிகாம் (BSNL)நிறுவனத்தின் தொலைபேசி இணைப்பு பன்னெடுங்காலமாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த ஓராண்டாக இத்தொலைபேசி இயங்கவில்லை!
இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரித்தால் தொலை தொடர்பு மீது பழியை போடுவதும்,தொலை தொடர்பை கேட்டால் மின்வாரியத்தை குறை கூறியும் மக்களை முட்டாளாக்கி வருகின்றனர்.
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இரண்டு பொது துறை நிறுவனங்களும் பொறுப்பற்று இருப்பதை பார்த்தால் வேடிக்கையாக உள்ளது.
எனவே மின் வாரிய அதிகாரிகள் இவ்விவகாரத்தில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மின் வாரியத்தை அவசர தேவைக்கு தொடர்புகொள்வோர் வசதிக்காக எந்நேரமும் பதிலளிக்க கூடிய வகையில் நடவடிக்கை தேவை என்கின்றனர் அதிரை நுகர்வோர்கள் !
Your reaction