புகழ்பெற்ற சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு !

1455 0


சேலம் இரும்பு ஆலையை தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளதால் அதில் பணியாற்றும் 2500 ஊழியர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

சேலத்தில் உள்ள இரும்பு உருக்காலை என்பது சேலத்திற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே பெருமை சேர்த்து வரும் ஆலையாகும். இந்த ஆலையை தமிழகத்தில் அமைக்க காமராஜர் முயன்று, அண்ணா ஆசைப்பட்டு, கடைசியில் கருணாநிதி முதல்வராக இருந்த போது கடந்த 1975ம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரகாந்தி ஒப்புக்கொண்டார்.

அப்படி பல தலைவர்கள் போராடி பெற்றதுதான் சேலம் இரும்பு உருக்கு ஆலை. சேலம் ரயில் நிலையத்தில் இருந்த தருமபுரி செல்லும் சாலையில் 4 ஆயிரம் ஏக்கர் பரபப்பளவில் அமைந்துள்ளது, இரும்பு மற்றும் ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் உள்பட உலகத் தரத்திலான பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலையாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் இருந்து தான் ரயில் பெட்டி உற்பத்திக்குத் தேவையான இரும்புத்தகடுகள் அனுப்பப்படுகின்றன. பல ஆயிரம் டன் நாணய வில்லைகள் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆலையில் நிரந்தர பணியாளர்களாக ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஒப்பந்த தொழிலாளர்கள் 1500 பேர் பணியாற்றி வருகிறார்கள். இப்படி மொத்தம் 2500 தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இன்றைக்கு சேலம் நகரின் அடையாளமாக உருக்கு ஆலை திகழ்கிறது.

இப்படி பெருமை மிக்க உருக்கு ஆலை கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயக்குவதாக கூறி கடந்த 2016ம் ஆண்டே இதன் பங்குகளை தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முயன்றது. ஆனால் அன்றைக்கு தொழிலாளர்கள் மற்றும் தமிழக அரரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் திட்டத்தை மத்திய அரசு கிடப்பில்போட்டு வைத்திருந்தது.

இந்த சூழலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்த உடன் முதல்கட்டமாக சேலம் இரும்பு உருக்கு ஆலையை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ளது. இந்த ஆலை மட்டுமல்லமால் துர்காபூர் உருக்கு ஆலை, உள்பட 3 ஆலைகளின் பங்குகளையும் சர்வதேச டெண்டர் விட்டுள்ளது மத்திய அரசு. இந்த டெண்டர் அறிவிக்கை இன்று வெளியாகி உள்ளது.

இந்த அறிவிக்கையை பொறுத்தவரை, உலகலாவிய டெண்டர் ஆகும். இதை யார் வேண்டுமானாலும் டெண்டர் எடுக்கலாம் என்ற அடிப்படையில் விடப்படுள்ளது. ஆகஸ்டு 1ம் தேதிக்குள் யார் வேண்டுமானாலும் டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம். டெண்டர் ஆகஸ்டு 8ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியாருக்கு விற்க இருப்பதை அறிந்து சேலம் உருக்காலை தொழிலாளர்கள் மிகப்பெரிய அதிர்ச்சியில் உள்ளார்கள். இந்த ஆலை முதல்கட்டகாலத்தில் நஷ்டத்தில் இயங்கினாலும் தற்போது லாபத்தில் இயங்கி வரும் நிலையை இந்த ஆலை எட்டியிருக்கிறது. எனவே இந்த ஆலையை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என்று தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் காரணமாக சுமார் 2500 முதல் 3000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளார்கள்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: