அதிரையில் வியாபாரி மயங்கி விழுந்து மரணம்!!

1919 0


அதிரையில் இன்று சுமார் 11.30 மணியளவில் (ECR) கடற்கரை சாலை ரயில்வே கேட் அருகே ஒருவர் மயங்கி விழுந்து மரணமடந்துள்ளார்.

இராமநாதபுரத்தை சார்ந்த 55 வயது மதிக்கத்தக்க சிந்து முஹம்மது. இவர் மரைக்காவலசையில் திருமணம் செய்து வசித்து வருகிறார்.

தனது குடும்பத் தேவைகளுக்காக வீடுகளுக்குத் தேவையான பொருட்களை அதிரை போன்ற சுற்றியுள்ள ஊர்களுக்கு வியாபாரம் செய்து வந்த இவர், இன்று வழக்கம் போல் வியாபரத்திற்கு அதிரை நோக்கி சைக்கிளில் வந்த நிலையில்,(ECR) சாலை ரயில்வே கேட் அருகே வந்த போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழ விழுந்துள்ளார்.

அக்கம் பக்கத்தினர், அவ்வழியே சென்றோர் அனைவரும் உடனடியாக தமுமுக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்ததையடுத்து, தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அஹமது ஹாஜா, கமால், மற்ற தமுமும நிர்வாகிகள் இறந்தவரின் உறவினர்களுக்கு தகவல் கூறி அவர்களை வரவழைத்து தக்வா பள்ளியில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: