செந்தலையில் பயங்கர தீ விபத்து !! வீடுகள் எரிந்து நாசம் !!

2041 0


செந்தலைவயல் மந்திரி பட்டினம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ள இப்பகுதியில் கூரையால் வேயப்பட்ட வீடுகள் அதிகம் உள்ளன.

இந்நிலையில் அப்பகுதியில் சமையல் எரிவாயு உருளை கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது .

இதில் தீ மளமளவென பரவி அக்கம்பக்கத்து வீடுகளுக்கு பரவியது. இதில் சுமார் 15 பவுன் தங்க நகை, 1 லட்ச ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவைகள் எரிந்து நாசமடைந்து விட்டன.

இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தும் நீண்ட நேரமாகியும் தீயணைப்பு வாகனம் வராததால் ஊர்மக்களே தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: