அதிரை காவல் நிலையம் சார்பாக பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..!!

1870 0


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

★பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியூர் செல்லும்பொழுது அது குறித்த விபரத்தை காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தினால் உங்கள் வீடு உள்ள பகுதி கண்காணிக்கப்படும்.

★விலை உயர்ந்த பொருட்கள், தங்க நகைகளை வீட்டில் வைப்பதை விட வங்கி லாக்கரில் வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

★இரவு நேரத்தில் வீட்டிற்கு முன்புறம் முகப்பு விளக்கை எரியவிட்டு உறங்கினால் அந்த பகுதியில் ஆள் நடமாட்டங்கள் இருப்பதை அறிய எளிதாக இருக்கும்.

★பகல் நேரங்களில் விற்பனையாளர்கள் போல், குறிப்பாக அயல் மாநிலத்தவர்கள் போன்ற நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். அப்படி யாரேனும் சந்தேகப்படும்படி இருப்பின் உடனடியாக காவல் துறையினருக்கு தெரிவிக்கவும்.

★வேலை காரர்கள் மற்றும் இதர நபர்களிடம் பண விபரம், வெளியூர் செல்லும் விபரம் பற்றி பேச வேண்டாம்.

★பீரோவ், வீட்டை பூட்டிவிட்டு சாவியை அருகில் வைக்க வேண்டாம்.

★முன் பின் தெரியாத நபர்கள் உங்களிடம் உதவி நாடி வந்தால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

★இரவில் உறங்கும்பொழுது காற்றோட்ட வசதிக்காக வெளிகதவையோ, ஜன்னல் காதவையோ திறந்து வைக்கக்கூடாது.

★இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை பாதுகாப்பு இல்லாத இடத்தில் நிறுத்த வேண்டாம்.

காவல் ஆய்வாளர், அதிராம்பட்டினம்.

தொடர்புக்கு: 9498159678,
04373 – 242450.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published.

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: