கிரிக்கெட்டில் எப்பொழுதுமே தனக்கென்று தனி முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் அதிரை AFCC அணி கடந்த காலங்களில் வரலாறு காணாத வெற்றிகளை ஈட்டியுள்ளது.
அது மட்டுமின்றி உள்ளூரில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களிலும் அதீத ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றதோடு தஞ்சாவூர் கிரிக்கெட் அசோசியேசன் சார்பில் தனக்கென தனி அந்தஸ்த்தையும் பெற்று மாவட்ட அளவிலான அணியாக வலம் வந்துக் கொண்டிருப்பதோடு, மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் நடத்த தனிச்சிறப்பும் பெற்றுள்ளது.
இதனையடுத்து கடந்த (06-04-2019) சனிக்கிழமை அன்று AFCC யின் 14 வது ஆண்டு கிரிக்கெட் தொடர் ஆரம்பம் ஆனது.
இத்தொடரில் பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் கலந்துக் கொண்டு விளையாடினர்.
இறுதிப் போட்டியில் APJ Village சிதம்பரம் அணியும் – காரைக்கால் அணியும் மோதினர். இதில் APJ Village சிதம்பரம் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.
இந்த AFCC கிரிக்கெட் தொடர் முழுமைக்கும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் ஒத்துழைப்பு நல்கிய அணைத்து அதிரை சகோதரர்களுக்கும், ஸ்பான்சர் செய்த உள்ளூர் நிறுவனங்களுக்கும், இந்த ஆண்டு கிரிக்கெட் தொடரை சிறப்புடன் நடத்தி முடிக்க உறுதுணையாய் இருந்த அதிரை AFFA அணி நிர்வாகிகள் மற்றும் வீரர்களுக்கு AFCC கிரிக்கெட் அணியின் ஒருங்கினைப்பாளர் நன்றி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Your reaction