அதிரை : ஃபியூலுக்கு 200 மீலுக்கு 200 ஆக மொத்தம் ₹400…

1499 0


 

தமிழகத்தில் வருகின்ற 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளன.

இதனால் தேர்தல் பிரச்சாரம் 100டிகிரியை தாண்டி அனலாய் பார்க்கிறது.

இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களின் பலத்தை நிரூபிக்க அதிரை இளைஞர்களை விலை கொடுத்து வாங்கும் படலம் நீடிக்கிறது.

நேற்று அதிரைக்கு விஜயம் செய்த வேட்பாளருக்கு பின்னால் சென்ற பல இளைஞர்கள் இன்று மாற்று அனியின் சின்னத்திற்கு வாக்கு கேட்டு செல்கின்றனர்.

பாரம்பரியமும் கன்னியமும் கட்டிக்காக்கப்பட்ட நமதூரின் இளைஞர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தும் போக்கு இன்றள்ள நேற்றள்ள பல்லாண்டுகளாக நடைபெற்ற போதிலும், சமீப கால அரசியல் மலத்தை மிஞ்சும் நாற்றத்தில் ஊறி திளைத்துள்ளன.

அவர்கள் பொருளீட்டிய முறை, ஊழல் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி,ஆள் கடத்தல்,மோசடி உள்ளிட்ட இன்னப்பிற வழிகளில் ஈட்டிய தொகையில் சிறு பங்களிப்பை வாக்களர்களாக உள்ள இன்றய இளைய தலைமுறையினருக்கு வாரி வழங்கும் வள்ளல்களாக மாரி போயுள்ளனர்.

இவர்களிடம் பணம் பெற்று செலவு செய்யும் இளைஞர்கள் ஒருகணம் சிந்திக்க மறந்து விடுகின்றனர்.

நல்ல குடும்பத்து பின்னணியை கொண்ட சிலரும் இச்சூழ்ச்சியில் சிக்குண்டு பலரையும் வழி கெடுக்கும் செயல் வேதனை அளிப்பதாக மத போதகர் ஒருவர் ஆதங்கப்பட்டு கொண்டார்.

மேலும் அவர் தொடர்கையில்.. எண்ணூறு ஆண்டுகால இந்தியாவை ஆண்ட சமூகம் இன்று ஒரு இயக்கதை அண்டி வாழ வேண்டிய சூழல் உருவாகி உள்ளன என்றும், எதிர்கால இந்திய இளைஞர்கள் கையில்தான் உள்ளன என முன்னோர்கள் விட்டு சென்ற நம்பிக்கைக்கு மாற்றாக உள்ளன.

திமுகவுக்காக உதிரம் கொதிக்க பேசும் ஒரு இளைஞன், மாற்று அணிக்காக போஸ்ட்டர் ஒட்டும் இளைஞர் வேறொரு கட்சிக்காக தனது வாகனத்தில் ஊர்வலம் போகிறான் என்றால் இவனின் கொள்கை தடுமாற்றத்தை பக்காவாக பயனடுத்துகிறது இன்றைய ஊழல் கட்சிகள் .
கட்சிகளால் வழங்கப்பட்ட ₹500ல்

பெட்ரோலுக்கு : ₹200
உணவுக்கு : ₹200
????????????? : ₹100

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: