நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று பல்வேறு மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தைப் பொறுத்த வரை இரண்டாம் கட்டத் தேர்தலாக வருகிற 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரப் பணிகளில் அரசியல் கட்சியினர் படு தீவிரமாக இறங்கியுள்ளனர்.
அந்த வகையில் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய இணையமைச்சர் S.S. பழனிமாணிக்கம் போட்டியிடுகிறார். தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வரும் அவர், இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் அதிராம்பட்டினத்திற்கு வருகை தந்தார்.
அப்போது ரஹ்மானியா மதரஸா பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டார். அப்போது திமுக, காங்கிரஸ், மமக, தமுமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
Your reaction