தமிழகத்தில் முழு ஆண்டு தேர்வு முடிந்து உள்ளுருக்கு படியெடுக்கும் படலம் தொடங்கியுள்ளன.
குறிப்பாக சென்னையில் படிக்கும் நமதூர் மாணவர்கள் ஊருக்கு திரும்பிக் கொண்டு உள்ளனர்.
முன்னதாக நமதூரில் கஞ்சா உள்ளிட்ட அபாயகரமான போதை வஸ்த்துக்களுக்கு அடிமையாகிவிட்ட இளைஞர்களுடன் தோழமைக்கொண்டு திரிவதால் பலருக்கும்.இந்த போதை பழக்கம் தொற்றிக்கொண்டு வாழ்கையில் சீரழிவு பாதைக்கு சென்றுக்கொண்டு உள்ளனர்.
இந்நிலையில் புதிதாக நட்புகொள்ளும் புதியவர்களுக்கு இது குறித்த அறிமுகம் கிடைக்கும் பட்சத்தில் போதைக்கு அடிமையாகி வாழ்வை சீரழிவு பாதைக்கு கொண்டு செல்ல நேரிடலாம் !
எனவே பெற்றோர்கள் தனது புதல்வர்கள் யார் யாருடன் நட்பு கொள்கிறார்கள்? நட்பு கொள்வோரின் பின்னனி என்ன, பழக்கவழக்கங்கள் என்ன என்று ஆராய்தல் அவசியமாகிறது.
Your reaction