அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம் !!(முழு விவரம்)

1307 0


அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 65-வது மாதாந்திர கூட்டம் கடந்த 08.03.2019 வெள்ளிக்கிழமை ஹாராவில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு உறுப்பினர் இக்பால் கிராஅத் ஓதினார். தலைவர் S. சரபுதீன் முன்னிலை வகித்தார். பொருளாளர் N. அபூபக்கர் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் A.M. அஹமது ஜலீல் சிறப்புரை ஆற்றினார். துணைச் செயலாளர் ஷேக் மன்சூர் அறிக்கை வாசித்தார்.

தீர்மானங்கள் :

1) வட்டியில்லா நகைக்கடன் திட்டத்தை மாற்றி துரித சேவையாகவும் இரட்டிப்பு மடங்காக கடன் தொகையை மாற்றி அமைத்து அதற்கான பயனாளர்கள் உரிய கால கெடுவுக்குள் நகைகளை மீட்டி சென்று ஒத்துழைப்பு கொடுத்தால் மற்ற புதிய கடன் தேவையாளர்கள் பயனடைய வாய்ப்பாக அமையும் என்பதை இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

2) ABM தலைமையகம் மூலம் பொதுமக்களின் குடிநீர் விநியோகம் பற்றியும் அதற்கான பில்டர் சம்பந்தமான தலைமையகத் தேவையையும் இக்கூட்டத்தில் முன் வைக்கப்பட்டது. இதன் மூலம் பள்ளிக்குழந்தைகளும் பொதுமக்களும் பயன் அடையும் முகமாக ஃபில்டர் தண்ணீர் வசதியை ஏற்படுத்தினால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதை இக்கூட்டத்தில் தெரியப்படுத்தி கொள்ளப்பட்டது.

3) மேலும் பைத்துல்மாலின் சேவையை துரிதபடுத்தி செம்மையாக செயல்படுத்துவதற்கு ஊரிலுள்ள இளைஞர்கள் முழு ஆதரவு கொடுப்பதுடன் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் தங்களை இணைத்துக் கொண்டு இஃஹ்லாஸான முறையில் சேவையை தொடர முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த ABM நிறுவனம் எவ்வித பாகுபாடின்றி செயல்பட்டு வரும் அனைத்து முஹல்லாவாசிகள் முழு ஒத்துழைப்பும் இனிவரும் மாதாந்திர கூட்டத்தில் கலந்து ஊர் வளர்ச்சிக்காக கருத்துக்களை பரிமாறிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

4) ABM தலைமையகம் உறுப்பினர்களின் எண்ணிக்கை மேம்படுத்தும் விசயமாக தற்காலிக உறுப்பினர்கள் ID-ஐ கால தாமதமின்றி விநியோகம் செய்வதோடு வெளிநாட்டிலும் உறுப்பினர்களின் ID-ஐயும் உடனே அனுப்பி தருமாறு இக்கூட்டத்தில் வேண்டிக் கொள்ளப்பட்டது.

5) இன்ஷா அல்லாஹ் வரும் நோன்பு இஃப்தார் நிகழ்ச்சி மற்றும் மெகா கூட்டம் விசயமாக திட்டவரையரையை அடுத்த மாதம் நடக்க இருக்கும் கூட்டத்தில் முடிவு செய்வதெனவும் ரியாத் வாசிகள் அனைவரும் கலந்து கடந்த வருடங்களை காட்டிலும் மேலும் சிறப்பாக நடத்துவதெற்கு நல்லதொரு யோசனைகளை பரிமாறிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

6) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் APRIL 12-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை நேஷனல் மியூசியம் பத்ஹா பார்க்கில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு இஷா தொழுகைக்கு முன்னதாக வரும் மாதாந்திர கூட்டத்தை நிறைவு செய்வதென ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதில் அதிரை வாசிகள் அனைவர்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

இறுதியாக கொள்கை பரப்புச் செயலாளர் P. இமாம் கான் நன்றியுரை ஆற்றினார்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: