ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ்நாடு மாநில புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

1877 0


ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம்
05-02-2019, செவ்வாய்க்கிழமைகாலை
10 மணிக்கு மதுரை சிம்மக்கல் பிரசிடெண்ட் ஹோட்டலில் மாநில தலைவர் மவ்லவி டாக்டர் A.ஆபிருத்தீன் மன்பயீ தலைமையில் நடைபெற்றது. இதனை
மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி முஹம்மது யஹ்யா தாவூதி துஆ செய்து துவக்கி வைத்தார்.
மாநில செயலாளர் மவ்லவி அர்ஷத் அஹமத் அல்தாஃபி வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
மாநிலப் பொதுச் செயலாளர் மௌலவி M.S சம்சுல் இக்பால் தாவூதி இரண்டு ஆண்டுகளுக்கான பொதுக்குழு அறிக்கையை சமர்ப்பித்து பொதுக்குழுவின் ஒப்புதலைப் பெற்றார்.
தேசிய பொருளாளர் மௌலவி உஸ்மான் பெய்க் ரஷாதி மற்றும் தேசிய பொதுச்செயலாளர் மவ்லவி பைசல் அஷ்ரஃபி ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக இருந்து (2019-2020) ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான மாநில நிர்வாகிகளின் தேர்தலை நடத்தினர்.
கீழ்க்காணும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்: மெளலவி ஹாபிழ் M.S.ஷம்சுல் இக்பால் தாவூதி

துணை தலைவர்கள்:
மெளலவி ஹாபிழ் P.A. மீரான் முஹ்யித்தீன் அன்வாரி
மெளலவி, ஹாபிழ் A.முஹம்மது யஹ்யா தாவூதி

மாநில பொதுச்செயலாளர்: மெளலவி டாக்டர் A.ஆபிருத்தீன் மன்பஈ M.C.S.

மாநில செயலாளர்கள்:
மெளலவி K.அர்ஷத் அஹ்மத் அல்தாஃபி B.A. (Arabic),
மெளலவி.ஹாபிழ் S.அப்துல் காதர் ஹஸனி

பொருளாளர்: மெளலவி D. செய்யது இப்ராஹீம் உஸ்மானி

மாநில செயற்குழு உறுப்பினர்கள்:
மெளலவி R.M முஹம்மது அபூபக்கர் சித்திக் ரஷாதி,
மெளலவி A.R. செய்யது முஹம்மது உஸ்மானி,
மெளலவி J.முஹம்மது நாஃபிஈ,
மெளலவி M.அப்துல்லாஹ் ஸஆதி,
மெளலவி M.A.ஷவ்கத் அலி உஸ்மானி,
மெளலவி M.முஹம்மது பாதுஷா மிஸ்பாஹி

மேலும் பொதுக்குழுவில் கீழ்க் காணும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

1.பாசிச பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடிப்போம்!

ஆளும் பாஜக அரசு மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற மக்கள் விரோத திட்டங்களின் மூலம் விவசாயத்தை அழித்து நாட்டை சுடுகாடாய் மாற்றியது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மற்றும் ஜிஎஸ்.டி மூலம் சிறு குறு தொழில்களை அழித்தது.

ஓகி புயல் கஜா புயல் போன்ற இயற்கை பேரிடரில் தமிழகத்தை திட்டமிட்டு வஞ்சித்தது.

இந்தியாவின் மதச்சார்பின்மையை தகர்த்து பாசிச இந்துத்துவ அரசின் வழியே வர்ணாசிரமத்தை தினித்து இந்திய இறையாண்மையை பாஜக அழிக்க நினைக்கிறது.
எனவே பாசிச பாஜகவை தோற்கடிப்போம் அதேபோன்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து பாசிச பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் தோற்கடிப்போம்.

2.முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு சமூக நீதிக்கெதிரானது!

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தங்களின் சதவிகிதத்தை விடப் பன்மடங்கு உயர்ந்திருக்கும் உயர்சாதிப் பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது! ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் என்று கூறி மக்களை ஏமாற்றும் மத்திய அரசை இப்பொதுக்குழு கண்டிப்பதோடு இந்த உயர்சாதி இடஒதுக்கீட்டை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

3)முத்தலாக் தடைச் சட்டத்தை திரும்பபெறு!

முஸ்லிம்களைப் நெருக்கடிக்குள்ளாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முத்தலாக் தடைச் சட்டத்தை மத்திய அரசு அவசர அவசரமாக நிரறைவேற்ற துடிக்கின்றதுகின்றது.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இதை நிறைவேற்ற இயலாத நிலையில் அவசரச் சட்டமாகப் பிறப்பித்து முஸ்லிம்களை வேதனைப்படுத்தி வருகின்றது.
குடும்பவியல் பிரச்சனைக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை என்ற சட்டத்தின் மூலம் இஸ்லாமிய ஆண்களை சிறைக்கு அனுப்பி, இஸ்லாமியப் பெண்களை நடுத்தெருவில் நிறுத்தத்திடவே மத்திய அரசு திட்டமிடுகிறது. முஸ்லிம்களின் தனியார் சட்டமான ஷரீஅத் சட்டத்தில் மூக்கை நுழைப்பதை ஒருபோதும் முஸ்லிம் சமுதாயம் அனுமதிக்காது. உடனடியாக முத்தலாக் தடைச் சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

4)பாபரி மஸ்ஜித் இடத்தில் பாபரி மஸ்ஜித் கட்டுவதே நீதி!

பாபர் மஸ்ஜித் இடத்தில் ராமர் கோவிலைக் கட்டுவோம் என அறிவித்து, நாட்டில் பதட்டத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் அடையத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இதர சங்பரிவார்களின் சதித்திட்டங்களை ஒருகாலத்திலும் முறியடிப்போம் . பாபர் மஸ்ஜித் இடத்தில் அத்துமீறி கால் வைக்க அனுமதிக்கமாட்டோம். எந்த விலை கொடுத்தேனும் இறையில்லம் பாபரி மஸ்ஜிதை மீட்போம். பாபர் மஸ்ஜித் இடத்தில் பாபரி மஸ்ஜித் கட்டுவதே நீதி! என இப்பொதுக்குழு அறைகூவல் விடுக்கின்றது.

5)முஸ்லிம்களுக்கு மத்தியில் 10%
மாநிலத்தில் 7% தனி இட ஒதுக்கீடு வழங்கு!
கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் முஸ்லிம் சமூகம் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ளதால்
முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் 10% மாநிலத்தில்7% தனி இட ஒதுக்கீட்டை
உடனே வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசை இப்பொதுக்குழு கேட்டுகொள்கிறது.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: