திருச்சி தப்லிக் இஜ்திமா..!

2394 0


திருச்சி.ஜன.25..,
திருச்சியில் நடைபெறவுள்ள தப்லீக் ஜமாத்தின் இஜ்திமா திடலுக்கு இரண்டாவது முறையாக இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA வருகை தந்தார்கள்.

இம்முறை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மாண்புமிகு வளர்மதி, சுற்றுலா துறை அமைச்சர் மான்புமிகு வெள்ளமண்டி. நடராஜன் ஆகியோரையும், அதிகாரிகளையும் அழைத்து வந்தார்.

அனைவரையும் தப்லீக் பொறுப்பாளர்கள் வரவேற்று மாநாட்டு அலுவலகத்தில் அமர வைத்து உபசரித்தனர்.

வெளிநாட்டு பேராளர்களின் வருகையில் விமான நிலையத்தில், மத்திய அரசு சார்ந்த அதிகாரிகளால் இடையூறு செய்யப்படுவதாகவும் குறை கூறினர்.

உடனே அமைச்சர்கள் கலெக்டரை தொடர்புக் கொண்டு, முறையாக விசா பெற்று வரும் ஆன்மீக பயணிகளை இடையூறின்றி வர ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

பிறகு பேருந்து வசதிகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரையும், காவல் பணிகள் குறித்து கமிஷனர் அமல்ராஜ் அவர்களிடமும், சுகாதார வசதிகள் குறித்து அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கர் அவர்களிடமும் அமைச்சர்கள் உடனுக்குடன் பேசி ஏற்பாடுகளை செய்துக் கொடுத்தனர்.

மற்ற பல அரசு துறைகள் சார்பில் சிறப்பாக ஒத்துழைப்புகள் தரப்படுவதாகவும் தப்லீக் ஜமாத்தினர் நன்றியுடன் கூறினர்.

குடிநீர் மற்றும் மின்சார இணைப்பு ஆகியன சிறப்பான ஒத்துழைப்புடன் நடைபெறுவதாகவும் கூறினர்.

ஜனவரி-28 அன்று திருச்சி மாவட்டத்திற்கு உள்ளுர் அரசு விடுமுறை வேண்டும் என்ற மஜக-வின் கோரிக்கையை தப்லீக் ஜமாத்தினர் அமைச்சரிடம் நினைவூட்டினர். உடனே அமைச்சர்கள் கலெக்டரிடம் பேசி, விதிகளை தளர்த்துதல் குறித்து ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

அது போல் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் (டோல்) ரத்து குறித்து இன்னும் முறையான உத்தரவு வரவில்லை என்றும் கூறினர். அது குறித்து இன்று மாலைக்குள் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் கூறினர்.

பிறகு மூவருக்கும் தப்லீக் ஜமாத்தினர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர்.

நாளை (ஜனவரி-26) தேசியக் கொடியை ஏற்றி மாநாடு தொடங்குவதாகவும், நாட்டு மக்களின் ஒற்றுமை மற்றும் சுபிட்சத்திற்காக பிரார்த்தனைகளும் நடைபெற உள்ளதாவும் அதில் மூவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.

நாளை சென்னையிலும், தொகுதிகளிலும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளதால் வர இயலாத நிலை உள்ளதை தெரிவித்தனர்.

பிறகு மாநாட்டு திடலை சுற்றிக் காண்பித்தனர். திடலின் பரப்பளவையும், பந்தல் அமைப்புகளையும் பார்த்து அமைச்சர்கள் வியந்தனர். தங்கள் பகுதியில் இந்த ஆன்மீக மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சியளிப்பதாகவும், எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள் என்று அமைச்சர் வெள்ளமண்டி. நடராஜன் நெகிழ்வுடன் கூறினர். யாராலும் இப்படி நடத்த முடியாது என்று அமைச்சர் வளர்மதி சிலாகித்தார்.

இப்பகுதியில் BJP-யினர் ஆரம்பத்தில் சில இடையூறுகளை தந்ததாகவும். பிறகு தப்லீக் ஊழியர்களின் அணுகுமுறைகளை பார்த்து அவர்கள் ஒதுங்கிக் கொண்டதாகவும் தப்லீக் நிர்வாகிகள் கூறினர்.

என்ன தேவையாக இருந்தாலும் தமிமுன் அன்சாரி MLA வீடம் கூறுங்கள். நாங்களே வந்து செய்து தருகிறோம் என அமைச்சர்கள் கூறி விட்டு விடைப்பெற்றனர்.

Your reaction

NICE
SAD
FUNNY
OMG
WTF
WOW

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)
%d bloggers like this: